தூதுவளை கீரை சூப்

Loading...

தூதுவளை கீரை சூப்
தேவையான பொருட்கள்:

தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து கொதிக்கும் புளிக் கரைசலில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக, ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கடுகை போட்டு தாளித்து, அந்த தாளிப்பை சூப்பில் சேர்க்க வேண்டும்.

இதை சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply