தூக்கமின்மையைப் போக்கும் அசத்தலான உணவுகள்

Loading...

தூக்கமின்மையைப் போக்கும் அசத்தலான உணவுகள்வேலை வேலை என இன்றைய தலைமுறை ஒரு இயந்திர வாழ்க்கையை பின்பற்றி வாழ்கின்றனர். இதன் காரணமாக மனித வாழ்வின் அத்யாவசிய தேவைகள் பலவற்றை மறந்து சமூகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் மறந்தவிட்ட காலம் போய் தற்போது அது நம்மை விட்டு சென்று விட்டது. அப்படி ஒன்று தான் தூக்கம். தூக்கமின்றி தற்போது பலர் அவதிப்பட்டு வருகின்றனர். நைட் ட்யூட்டி என பலர் இரவில் வேலை பார்த்து பகலில் தூங்கி வருகின்றனர். மேலும் மன அழுத்தத்தின் காரணமாக தூக்கமின்றி பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக தூக்கமின்மையில் இருந்து விடுபட்டு நிம்மதியான தூக்கத்தை பெறலாம்…

* செர்ரி பழத்தில் தூக்கத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய மெலடோனின் என்ற வேதி பொருள் உள்ளது. எனவே தினமும் தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 2 செர்ரி பழங்களை சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இந்த சத்துக்கள் மூளையை சென்றடையும் போது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடுகின்றன. எனவே தினமும் தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நன்கு தூங்கலாம்.

* ஓட்ஸ் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி இன்சுலின் சுரப்பதை தூண்டிவிடுகிறது. இது தூக்கத்தை தூண்டிவிடுகிறது.

* பாலிலும் வாழைப்பழத்தில் உள்ளது போலவே தூக்கத்தை தூண்டும் செரடோனின் வேதி பொருளை உற்பத்தி செய்யும் சத்துக்கள் உள்ளன. எனவே இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான பால் குடியுங்கள், நிம்மதியான உறக்கத்தைப் பெறுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply