திருமண நாள் நெருங்கும் போது நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Loading...

திருமண நாள் நெருங்கும் போது நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்உங்கள் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறதா? அப்போது நீங்கள் கட்டாயம் இந்த உணவுகளை கொஞ்சம் தவிர்க்க வேண்டும். ஆம், சில உணவுகள் வாயுத்தொல்லை, செரிமான கோளாறு போன்றவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. பொதுவாகவே இந்த பிரச்சனைகள் உடலில் ஏற்பட்டால் பெரும் அவஸ்தியாக இருக்கும்.

அதுவே திருமணத்தின் போது ஏற்பட்டால்? கேட்கவா வேண்டும். கண்டிப்பாக பெரும் அவதியாக அமைந்துவிடும். எனவே, உங்கள் நன்மைக்காகவாவது நீங்கள் இந்த உணவுகளை திருமண நாள் நெருங்கும் போது இந்த உணவுகளை தவிர்க்க தான் வேண்டும்….


ஜங்க் உணவுகள்

பர்கர் மற்றும் ப்ரென்ச் ப்ரைஸ் போன்ற ஜங்க் உணவுகளுக்கு “பாய்” சொல்லிட வேண்டும். ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் எடை அதிகரித்துவிடும்.


சோடா

திருமணத்திற்கு 2 மாதத்திற்கு முன்பிருந்தே வெளியே அதிகம் பர்சேஸ் செய்ய வேண்டியிருக்கும். அப்போது பர்சேஸ் முடித்து வீட்டிற்கு வந்ததும், ஏதேனும் ஜில்லென்று குடிக்க வேண்டும் போல் இருக்கும், அந்த நேரம் சோடாவை குடிப்பதை தவிர்த்து, பழ ஜூஸ் செய்து குடித்தால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.


பால் பொருட்கள்

பால் மற்றும் சீஸ் பொருட்கள் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும். மேலும் அதிலுள்ள வாயுவின் காரணமாக வயிறு எப்போதும் உப்புசத்துடனே இருக்கும். அதுமட்டுமல்லாமல், சீஸ் மற்றும் தயிர் கூட உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆகவே அதிகம் கொழுப்புள்ள பால் பொருட்களுக்கு பதிலாக, ஸ்கிம் மில்க் மற்றும் குறைந்த கொழுப்புள்ள சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இதனால் உடல் எப்போதுமே ஆரோக்கியத்துடன் இருக்கும்.


செயற்கை இனிப்புகள்

தற்போது சாக்லேட் மற்றும் சூயிங் கம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனை அதிகம் அவ்வாறு சாப்பிட்டால், பற்கள் பாதிப்படைவதோடு, வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படும். சிலசமயங்களில் பற்களில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பற்களின் நிறத்தையே மாற்றிவிடும்.


காப்ஃபைன்

ஒரு கப் காப்பி நல்ல புத்துணர்ச்சியை தரும் தான். இருப்பினும் அவை உடலில் இருக்கும் நீர்ச்சத்தின் அளவை குறைத்துவிடும். ஆகவே அதிக அளவில் காப்பி குடிப்பதை தவிர்த்து, அப்போது தண்ணீர் அல்லது பழ ஜூஸை பருகலாமே!


உப்பு

உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடுவதோடு, உடலில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.


பீன்ஸ்

பீன்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானது தான். ஆனால் அவை உடலில் வாயுத் தொல்லை மற்றும் வயிற்றில் மந்தத் தன்மையை ஏற்படுத்தும். ஆகவே அவற்றை திருமணம் நடப்பதற்கு முன்பு சில நாட்கள் சாப்பிடாமல் இருப்து நல்லது. மேலும் இதில் ஒருவிதமான சர்க்கரைப் பொருள் உள்ளது. இதனால் உடலில் செரிமானத்திற்கு சில தடைகள் ஏற்படும்.


சாம்பைன்

திருமணத்திற்கு முன்பு நண்பர்கள் நிச்சயம் பார்ட்டி கேட்பார்கள். அப்போது ஆல்கஹால் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் அருந்தவேண்டிய நிலைமை இருந்தால், அப்போது சாம்பைன் பானத்தை மிகவும் குறைந்த அளவில் அருந்த வேண்டும். ஏனெனில் அவை ஒரு கார்போனேட்டட் பானம் என்பதால், செரிமான மண்டலத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, வாயுத் தொல்லையை உண்டாக்கும்.


பாஸ்தா

பாஸ்தா அதிக சுவையுடன் தான் இருக்கும். ஆனால் அது ஒரு மாச்சத்து உணவு. ஆகவே அவற்றை சாப்பிட்டால், மந்த நிலை மற்றும் வாயுத் தொல்லை போன்றவை ஏற்படும். ஆகவே இந்த நேரங்களில் மாச்சத்து உணவுகளான பாஸ்தா, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.


இனிப்பு வகைகள்

உணவை உண்ட பின்பு சிலர் ஐஸ் கிரீம், மில்க் ஷேக் போன்றவற்றை சாப்பிடுவார்கள். இத்தகையவற்றிலும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றன. எனவே அத்தகையவற்றை அதிகம் சாப்பிட்டால், விரைவில் உடல் பருமனாகிவிடும்.

Loading...
Rates : 0
VTST BN