தலை முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள்

Loading...

தலை முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள்ஆண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஆண்மைக் குறைவு மற்றொன்று இந்த முடி சார்ந்த பிரச்சனைகள். இவை இரண்டுமே ஹார்மோன் சார்ந்தும் பின்தொடரலாம். ஆனால், தீர்வு இல்லாத ஒன்று எதுவுமே இல்லை. இயற்கை உணவுகள் மற்றும் மூலிகைகளை சரியாக பயன்படுத்தினாலே முடி பிரச்சனைக்கு தீர்வுக் காண முடியும்.

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று தேக்கரண்டி தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் அடர்த்தியாகவும் வளரும். வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, வேர், தண்டு, ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து , 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒரு வாரம் வெயிலில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நீண்டு வளரும்.

கீரை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைபழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும். மற்றும் பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.

செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும். பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து முடி உதிர்ந்த பகுதியில் பூசினால் முடி வளரும். நன்னாரி வேரை பாலில் இட்டுக் காய்ச்சிக் குடித்து வர தலை முடி நன்கு கருத்து வளரும். மேலும் மற்றுமொரு தொகுப்பில் முடி உதிர்தல் மற்றும் உடைத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகளை பற்றி காணலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply