தலைவலிக்கு நிவாரணம் தரும் முக்கிய உணவுகள்

Loading...

தலைவலிக்கு நிவாரணம் தரும் முக்கிய உணவுகள்தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட சொல்லல்ல. உண்மையில் தலைவலி வந்தால் மொத்த செயலும் பாதிக்கும்.

தலைவலியோடு வேலைகளும் கூட சேர்ந்து என்ன செய்வதென்றே தெரியாமல் தவிர்ப்பார்கள்.
முதலில் தலைவலி எதனால் வருகிறது என தெரிந்து கொள்ளவேண்டும். பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரியவந்தபின், பிரச்சனைகளை சுலபமாக கையாளலாம்.

எதனால் வருகிறது என கண்டுபிடித்து அதனை தவிர்க்க வேண்டும். தலைவலி சிலருக்கு உண்ணும் மசாலா உணவினால், காலையில் சாப்பிடாமல் இருந்தால், பித்தம் அதிகமாய் போனால், வேலை அழுத்தம் , மலச்சிக்கல் என நிறைய காரணங்களை சொல்லிக் கொண்டு போலாம்.
இதற்கு வாஸ்குலர் தலைவலி என்பார்கள்.

இவற்றில் தலைவலியோடு, வாந்தி, குமட்டலும் ஏற்படும்.
தலைவலி வந்தால் எவ்வாறு அதனை குறைக்கலாம் என பார்க்கலாம்


பால் :

உடலில் அமிலத்தன்மை அதிகமாகும்போது தலைவலி உண்டாகும். ஆகவே ஒரு கிளாஸ் கொழுப்பு குறைந்த பாலை பருகுங்கள். இவை தலைவலியை குறைக்கும். வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.


பசலைக் கீரை சூப் :

பசலைக் கீரையில் ரிபோஃப்ளேவின் உள்ளது. இது தலைப் பகுதியிலுள்ள நரம்புகளுக்கு இதம் அளிக்கும். பசலைக் கீரையில் சூப் வைத்து குடித்தால் தலைவலி குறையும்.


அவித்த உருளைக் கிழங்கு :

மது குடித்தால், சிலர் மறு நாள் தலைவலியோடுதான் எழுந்திருப்பார்கள். மதுவினால், உடலிலுள்ள, பொட்டாசியம் போன்ற மினரல் சத்துக்கள் இழந்தாலும் தலைவலி கூடும். இதற்கு அவித்த உருளைக் கிழங்கு நல்ல சாய்ஸ்.


மீன் :

மீன் தலைவலியை போக்கும் அருமையான உணவாகும். குறிப்பாக, சாலமன், டனா போன்ர மீன்களை உண்டால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


தர்பூசணி :

உடலில் நீர்சத்து குறைவாக இருக்கும்போது தலைவலி உண்டாகும். அந்த சமயங்களில் தர்பூசணி சாப்பிடலாம். இதிலுள்ள நீர்சத்து உடலில் கனிமங்களை சமன் செய்கிறது.வாழைப்பழம் :

வாழைப்பழம் தலைவலியைப் போக்கும் சிறந்த உணவாகும். இதிலுள்ள பொட்டாசியம் மெக்னீசியம் , இறுகி , சுருங்கி இருக்கும் ரத்த நாளங்களை திறந்து, தலைவலியை போக்கச் செய்கிறது.


பாதாம் :

பாதம் தினமும் ஊற வைத்து சாப்பிட்டால் ரத்தகுழாய்களை ஆரோக்கியமாக இருக்கும். தலைவலி வருவதை தடுக்கலாம். அதிலுள்ள பொட்டாசியம் தலைவலிக்கு நிவாரணம் தரும் .கோதுமை பிரெட் :

மூளைக்கு சரியான அளவு கிளைகோஜன் கிடைக்காதபோது, தலைவலியை ஏற்படுத்தும். அனத சமயங்களில் கொதுமை பிரெட் சாப்பிட்டால் அது கிளைகோஜன் அளவை சமன் செய்து அதனால் உண்டாகக் கூடிய தலைவலியை குணப்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply