தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

Loading...

தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
சீரக சம்பா அரிசி – 3 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறி கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கி கொள்ளவும்)
புதினா – 1/4 கப் (நறுக்கியது)
தண்ணீர் – 4 1/2 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


பிரியாணி மசாலாப் பொடிக்கு தேவையானவை…

பட்டை – 4
கிராம்பு – 5
சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
அன்னாசிப்பூ – 1
கல்பாசி – 5
ஏலக்காய் – 5


செய்யும் முறை:

முதலில் அரிசியை கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியா கவைத்துக் கொள்ளவும்.

பின்னர் பிரியாணி மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளி போட்டு மென்மையாகும் வரை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மற்றும் மல்லிப் பொடி சேர்த்து, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு, பின் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து மசாலாவுடன் மட்டன் ஒன்று சேர வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீர் வற்ற நன்கு பிரட்டி, பின் அரிசியை போட்டு கிளறி, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதிக்கும் போது, குக்கரை மூடி 1 விசில் விட்டு, நெருப்பை குறைத்து 5 நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி தயார்!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply