தற்காலிமான இலத்திரனியல் டாட்டூ முறை

Loading...

தற்காலிமான இலத்திரனியல் டாட்டூ முறைதமது உடல் பாகங்களில் விதம் விதமான டாட்டூகளை வரைந்து அழகு பார்ப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
எனவே இதனை இலக்காகக் கொண்டு தற்காலிமான இலத்திரனியல் டாட்டூ முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாட்டூக்கள் இரத்தத்தில் உள்ள அல்கஹோல் மட்டத்தை உய்த்தறியும் ஆற்றல் கொண்டன.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த இலத்திரனியல் டாட்டூக்களின் மூலம் அல்கஹோல் மட்டம் தவிர, நீரிழிவு நோய்க்கு காரணமான இன்சுலின் மட்டத்தினையும் அறிந்துகொள்ள முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
மேலும் இந்த டாட்டூவினை உடல் பாகத்துடன் ஒட்டிய பின் 15 நிமிடங்களில் அல்கஹோல் மற்றும் இன்சுலின் மட்டங்களை கணித்துவிடும்.

தவிர இந்த டாட்டூவினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் லேப்டொப்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தினை சிறந்த முறையில் பேண முடியும் என குறித்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply