தயிரைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைப்பது எப்படி

Loading...

தயிரைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைப்பது எப்படிநமது உணவுமுறையில் தினமும் தயிரை சேர்த்துக் கொள்வதால் உடல் எடை குறைகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பொதுவாகவே காலம், காலமாக நாம் நமது மதிய உணவின் கடைசியிலும், நண்பகல் மற்றும் மாலை வேளைகளிலும் தயிரை உணவிலும், மோராகவும் உட்கொண்டு வருகிறோம்.

தயிரில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரைப்பை, குடல், வயிறு சார்ந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு தருகிறது தயிர். மற்றும் இந்த பாகங்களில் தொற்றிக் கொண்டிருக்கும் நச்சுக்களை அளிக்கவும் தயிர் உதவுகிறது. செரிமான கோளாறு, வயிற்றுப் போக்கு போன்றவைக்கு நல்ல தீர்வளிக்கிறது தயிர்.

தயிரில், புரதம், கால்சியம், உயிர்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஆய்வில் பாலை விட தயிர் உடலுக்கு சக்தி தரவல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. பாலில் இருக்கும் லாக்டோஸ் எனும் மூலப்பொருள் தயிராக மாறும் போது லாக்டிக் அமிலமாக மாறுகிறது.

இன்டர்நேஷனல் ஜெனரல் ஆப் ஒபிசிட்டி என்ற மையம் நடத்திய ஆய்வில் குறைந்த கொழுப்புச்சத்துள்ள தயிரை அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை சீரான முறையில் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் உங்கள் உணவு முறையில் தினமும் தயிரை சேர்த்துக் கொள்வதால் 22%வரை அதிகமாக உடல் எடையை குறைத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் தினமும் தயிரை நீங்கள் உணவில் சேர்த்து வருவதால் சருமம் பளபளப்பாக மாறும். இனிமேல் தினமும் உங்கள் உணவு முறையில் தயிரை சேர்த்துக் கொண்டு, அழகான சருமும், கட்டுடல் மேனியும் பெற்று வலிமையான வாழ்க்கையை வாழுங்கள்!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply