தண்ணீரில் பறக்கும் டாக்ஸி

Loading...

தண்ணீரில் பறக்கும் டாக்ஸிபிரான்ஸ் நாட்டில் சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் காலை அலுவலகத்திற்கு செல்வதிலிருந்து இரவு வீடு திரும்பும் வரை எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல் தான்.
இந்த பிரச்சனையிலுருந்து சற்று விடுபடவே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த டாக்ஸி முட்டை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் 5 பேர் இலகுவாக பயணம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்ணீர் உட்புகாதவாறும், மணிக்கு 45கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் நாட்டின் ரைன் நதியில் இந்த டாக்ஸியின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த டாக்ஸியை ஸ்மார்ட் போன் மூலம் இயங்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக சீ பப்புள்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply