தக்காளி பூண்டு தொக்கு

Loading...

தக்காளி பூண்டு தொக்கு
தேவையானவை:
நாட்டுத் தக்காளி – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) , உரித்த மலைப்பூண்டு – 15 பற்கள்,
துருவிய இளம் இஞ்சி – 50 கிராம், மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன்,நல்லெண்ணெய் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
நல்லெண்ணெயை காயவிட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து… பூண்டு, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பாதி வதங்குகையில் நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். தொக்கு திரண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply