செரிமான பிரச்சனை வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Loading...

செரிமான பிரச்சனை வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு செரிமானம் சரியாக நடைபெற வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் செரிமான பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளான பிட்சா, பர்கர் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வது தான் காரணம்.

இந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, மற்ற உணவுகளின் மூலம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களை உடலால் உறிஞ்ச முடியாமலும் செய்கிறது. எனவே செரிமான பிரச்சனை வராமல் இருக்க, மோசமான ஜங்க் உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.

இங்கு செரிமான பிரச்சனை வராமல் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


பீட்ரூட்

பீட்ரூட் உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படாமலும் தடுக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற செரிமானம் சரியாக நடைபெறத் தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.


ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், செரிமானம் சீராக நடைபெறும். ஏனெனில் இதில் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் ஏ, கனிமச்சத்துக்களில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் பெக்டின் என்னும் பொருளும் வளமாக நிறைந்துள்ளது. இதனால் வயிற்றில் எவ்வித பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.


வாழைப்பழம்

தினமும் வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, அதனால் செரிமான பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.


அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ உடலுக்கு குளிர்ச்சி மட்டுமின்றி, அதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், செரிமான நன்கு நடைபெறும். மேலும் அவகேடோ சாப்பிட்டால், பித்தப்பை மற்றும் கணையம் நன்கு இயங்கும்.


ஓட்ஸ்

ஓட்ஸில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனை வராமல் இருக்கும். மேலும் மலச்சிக்கல் வராமலும் இருக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply