செட்டிநாடு சுண்டைக்காய் பச்சடி

Loading...

செட்டிநாடு சுண்டைக்காய் பச்சடி
தேவையானவை:
சுண்டைக்காய் 1 கப், தக்காளி 1, சின்ன வெங்காயம் 20, பச்சைமிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப, துவரம் பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, புளி 2 சுளை, சாம்பார்பொடி முக்கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் 6 டீஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை அவியலாக வேகவைத்துக் கொள்ளவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, நான்காக நறுக்கவும். (சுண்டைக்காயை நறுக்கியதும் சமைக்க வேண்டும்.
இல்லையெனில் கறுத்துவிடும். தண்ணீரில் சிறிது மோர் கலந்து, அதில் சுண்டைக்காயை நறுக்கிப் போட்டு, பிறகு பிழிந்துபோட்டு வதக்கலாம்). சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை நடுவில் வகுந்துகொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சுண்டைக்காய், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கியெடுக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து, அனைத்தையும் பருப்போடு போட்டு வேகவிடவும். சாம்பார்பொடியை சேர்த்து வேகவிடவும்.
காய் வெந்ததும், உப்பு, புளி கரைத்து ஊற்றவும். பச்சடி நன்கு கொதித்து, கெட்டியானதும் (கூட்டு பதத்தில்) கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். செட்டிநாட்டு சமையலில், பச்சடிக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. சாதத்துக்கு பிசைந்து சாப்பிடவும், தொட்டுக்கொள்ளவும் ஏற்றது. வயிற்றுக்கு கேடு செய்யாத, சத்தான சைட் டிஷ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply