செட்டிநாடு இறால் மசாலா

Loading...

செட்டிநாடு இறால் மசாலா
தேவையான பொருட்கள்:

இறால் – 300 கிராம்
வெங்காயம் – 3
தக்காளி – 4
சோம்பு – 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
பட்டை – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கெட்டியான தயிர் – 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையைப் போட்டு தாளித்து, பின் சோம்பு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் மஞ்சுள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு தக்காளி மென்மையாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அது கிரேவி பதத்திற்கு வந்ததும், அதில் கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு அதில் கழுவி வைத்த இறாலை போட்டு நன்கு கிளறி விட்டு 1 நிமிடம் வேக வைத்து இறக்கினால் அருமையான செட்டிநாடு இறால் மசாலா தயார்..!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply