சூரியனை விட அதிக எடை யுள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Loading...

சூரியனை விட அதிக எடை யுள்ள நட்சத்திரம் கண்டுபிடிப்புசூரியனை விட அதிக எடை யுள்ள நட்சத்திரத்தை விஞ் ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு பால் வீதியை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் பலனாக சூரியனை விட அதிக எடை யுள்ள இளம் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரம் பூமியில் இருந்து 11 ஆயிரம் ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், சூரியனை விட 30 மடங்கு நிறை கொண்டதாக அந்த இளம் நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தால், பால் வீதியில் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஏனெனில், அந்த இளம் நட்சத்திரம் தன் பகுதியில் உள்ள மூலக்கூறுகளை எல்லாம் ஈர்த்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அப்படி அந்த இளம் நட்சத்திரம் முழுமை அடையும் போது மிகப்பெரிய நட்சத்திர மாக மாறும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
நமது பால் வீதியில் உள்ள பெரும்பாலான இளம் நட்சத் திரங்கள் மிக விரைவாக வளர்ந்து குறைந்த காலத்தி லேயே எரிந்து ஒன்றுமில்லாமல் போய் விடும். எனவே, அவற்றை ஆய்வு செய்வது மிகவும் கடினம். இந்த நட்சத்திரம் தொடர் பான ஆய்வு கட்டுரை, ‘ராயல் ஆஸ்டிரோனாமிக்கல் சொசைட்டி’ மாத இதழில் வெளியாகி உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply