சுடுநீரில் தலைக்கு குளிப்பவரா நீங்கள் கூந்தல் நலன் சீர்கெடும் ஜாக்கிரதை

Loading...

சுடுநீரில் தலைக்கு குளிப்பவரா நீங்கள் கூந்தல் நலன் சீர்கெடும் ஜாக்கிரதைசூடான நீரில் தலைக்கு குளித்தால் முடி உதிர்தல் அதிகமாகும். ஏனெனில் அப்போது முடித்துளைகள் விரிவடைவதால், வேர்கள் வலுவிழந்து, கூந்தல் காய்ந்தப் பின்னர் பார்த்தால், கூந்தல் கையோடு கொத்தாக வரும்.

அதுமட்டுமின்றி சுடு தண்ணீர் கூந்தலை எரித்துவிடும். அதாவது கூந்தலானது கெராட்டீன் என்னும் புரோட்டீனால் உருவானது. ஆகவே சூடான நீரில் குளிக்கும் போது, இந்த புரோட்டீனானது அதிக அளவில் வெப்பமடைகிறது. பின் அவை எளிதில் கரைந்து விடும். ஆகவே வெப்பம் அதிகமாக உள்ள நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சூடான தண்ணீரில் குளிக்கும் போது ஷாம்பு போட்டு குளிப்பது மிகவும் கெட்ட விளைவை அளிக்கும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஏனெனில் சூடான நீருக்கும், வெதுவெதுப்பான நீருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதிலும் பொதுவாக ஷாம்பு போட்டு குளித்தாலே, கூந்தல் வலுவிழந்து இருக்கும். அப்போது சூடான நீரில் அலசினால், கூந்தலை நன்கு கொத்தாக எடுக்கலாம்.

மேலும் சூடான நீரில் குளித்த பிறகு கண்டிஷனர் போடுவது கூந்தலின் நலனை வலுவிழக்க செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply