சீஸ் ஸ்டிக்ஸ்

Loading...

சீஸ் ஸ்டிக்ஸ்மைதா – 1 கப், சீஸ் துருவல் – கால் கப், சீஸ் க்யூப்ஸ் – 10, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை. நெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – சிறிதளவு, எண்ணெய் – தேவைக்கு.


செய்முறை :
* மைதாவுடன் பேக்கிங் பவுடர், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, நெய், துருவிய சீஸ் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். * பிசைந்த மாவை சிறிய பூரிகளாக இடுங்கள். * சீஸ் க்யூப்களை எடுத்துத் துருவி, பூரி மேல் தூவுங்கள். அதை மற்றொரு பூரியால் மூடி, பாய் சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளுங்கள். * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற சூடானதும் உருட்டி வைத்துள்ள சீஸ் உருளைகளை போட்டு பொரித்தெடுங்கள்.* பிள்ளைகளுக்குக் கடிப்பதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற சத்தான ஸ்டிக்ஸ்!* சுலபமாக செய்யக்கூடிய இந்த சீஸ் ஸ்டிக்ஸில், கால்சியமும் புரதமும் நிறைந்துள்ளன. இவை எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு உதவும். நரம்பு மண்டலத்தை உஷார் நிலையில் வைத்திருக்கவும் உதவும். –

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply