சிறப்பான செல்பீ எடுக்க ஹானர் 5சி

Loading...

சிறப்பான செல்பீ எடுக்க ஹானர் 5சி!இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவு கருவியான ஹானர் 5சி குறைந்த விலையில் மற்ற கருவிகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

இதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்தக் கருவியின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன.

இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.10,999க்கு இந்தக் கருவி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த விலையிலும் சக்தி வாய்ந்த பிராசஸரான கிரின் 650 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 8 எண்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 5சி கேமராவுடன் எல்இடி பிளாஷ், PDAF, நைட் மோடு மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் பயனர்கள் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் சிறப்பான செல்பீ எடுக்க ஏதுவாக 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply