சிக்கன் ரோஸ்ட்

Loading...

சிக்கன் ரோஸ்ட்

என்னென்ன தேவை?

சிக்கன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – ஒரு கிலோ

தக்காளி – 1

எலுமிச்சை பழம் – அரை.

சிக்கன் மசாலா பொடி – 1 பாக்கெட்

முட்டை – 1

மிளகாய் வத்தல் பொடி – ஒரு ஸ்பூன்

எண்ணை, தயிர், உப்பு – தேவையான அளவு

1. சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2. சிக்கனை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும். அதில் சிக்கன் மசாலா பொடியை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.எப்படி செய்வது?

கடாயை அடுப்பில் வைத்து, தேவையான அளவு எண்ணை ஊற்றி பின்னர் வெட்டி வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறை சிறிதளவு அதில் கலக்க வேண்டும்.

பின்னர் சிக்கன் மசாலா கலந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும். சிக்கன் ஓரளவு வெந்தவுடன் சிறிதளவு தயிர் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் தேவையான அளவு மிளகாய் வத்தல் பொடி, உப்பு ஆகியவற்றை அதில் கலக்கி வதக்க வேண்டும்.

தொடர்ந்து முட்டையை அதில் ஊற்றி நன்றாக வதக்க வேண்டும். அருமையான சிக்கன் ரோஸ்ட் தயார். இதை செய்ய 45 நிமிடங்கள் ஆகும். இதனை சப்பாத்தி, பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply