சிகா வைரஸுக்கு எதிராக புதிய தொழில்நுட்பம்

Loading...

சிகா வைரஸுக்கு எதிராக புதிய தொழில்நுட்பம்உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் சிகா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில் அந்த வைரஸின் தாக்குதலை எதிர்கொள்ள கனடா நாட்டைச் சேர்ந்த ‌ நிறுவனம் ஒன்று ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது.

பார்ப்பதற்கு ஒரு குப்பைத்தொட்டி போல இருக்கும் இந்தப் பொருள் உண்மையில் ஒரு கொசுவலை. கனடா நாட்டிலுள்ள க்ரீன் லிட் என்கிற நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாகாண அரசுடன் இணைந்து இந்த வலையை உருவாக்கியுள்ளது.

சிகா வைரஸ், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்க‌‌ளைக் கொல்ல இந்த பிரத்யேக கொசுவலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கும் தன்மை கொண்ட இந்த கொசுவலையின் விளிம்புகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தடவப்பட்டுள்ளன.

இந்த வலையில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும் என்றும், கருப்பு நிறத்தில் இந்த வலை இருப்பதால் கொசுக்கள் இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டு தண்ணீரில் விழுந்து உயிர்விடும் என்றும் இந்த வலையை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply