சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படி

Loading...

சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படிபழைய லாப்டாப் பயன்படுத்தப்படாமல் வீட்டில் இருக்கின்றதா, அப்படியானால் அதில் சிறிய கருவியை பொருத்தி அதன் திரையை டச் ஸ்கிரீனாக மாற்றிடுங்கள்.

குழப்பமாக உள்ளதா? சாதாரண திரையை தொடு திரையாக மாற்றும் சிறிய கருவி தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பற்றிய விரிவான தகவல்களை கீழே காணலாம்.


நியோநோடு

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு எனும் நிறுவனம் ஏர்பார் எனும் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கருவியை சாதாரண திரையை தொடு திரையாக மாற்றிடும் திறன் கொண்டிருக்கின்றது.


யுஎஸ்பி போர்ட்

யுஎஸ்பி போர்ட் மூலம் கணினியில் இணைத்து திரையின் கீழ் பொருத்தினால் போதும். உடனடியாக உங்களது திரை தொடுதிரையாகி விடும்.


கருவி

ஏர்பார் கருவியை பொருத்திய பின் உங்களது கை, பென்சில், கையுறை என எதை கொண்டும் திரையை பயன்படுத்தலாம்.


மென்பொருள்

ஏர்பார் பயன்படுத்த யுஎஸ்பி மட்டுமே போதுமானது, தனியே ஏதும் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.


விண்டோஸ்

தற்சமயம் வரை விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஏர்பார் கருவியானது விரைவில் ஆப்பிள் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.


முன்பதிவு

ஏர்பார் இணையதளத்தில் 15.6 இன்ச் திரை கொண்ட கணினி வகைகளுக்கான கருவியை $49க்கு முன்பதிவு செய்திட முடியும். இந்த கருவி சந்தையில் 2016 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.


வீடியோ

ஏர்பார் கருவி எவ்வாறு இயங்குகின்றது என்பதை வீடியோ மூலம் பார்த்திடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply