சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்

Loading...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. முற்காலத்தில் எல்லாம் குறிப்பிட்ட வயதிற்கு மேல், அதாவது 40, 50 வயதுக்கு மேல் ஆனால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. இப்பொழுதோ பிறந்த குழந்தைக்குக் கூட சர்க்கரை நோய் உள்ளது. இந்த சர்க்கரை நோயை முற்றிலுமாகத் தடுக்க வழி எதுவும் இல்லை. ஆனால், கட்டுப்படுத்த வழிகள் உள்ளன. அதுவும் நாம் பின்பற்றும் உணவு முறையில் தான் உள்ளது. வாருங்கள் நாம் இப்போது அவற்றில் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்….

* சர்க்கரை நோய் தாக்குதலை தவிர்க்க நாம் சாப்பிடும் உணவில் மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் ஆகியவை 60:20:20 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.

* முதலில் காய்கறிகள், அதுவும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும். உதாரணமாக பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகள் இவற்றில் எல்லாம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றன.

* காய்கறிகளைப் போலதான் பழங்களிலும் அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம், திராட்சை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஏனெனில், அவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கிறது.

* தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைத் 100 மி.லி. தண்ணீரில் ஊற வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் அதை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதேபோல் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கும் இனிப்புப் பண்டங்களுக்கும் ரொம்ப தூரம். ஆனால் அவர்களுக்கும் இனிப்புப் பண்டங்கள் சாப்பிட வேண்டும் என்று ஆசையாகத் தான் இருக்கும். அதற்காகத் தான் இருக்கிறது இயற்கை இனிப்பான தேன். அவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக தேவையான அளவு தேனைப் பயன்படுத்தலாம்.

* சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு முறை பால் குடிக்க வேண்டும். ஏனெனில், பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் சரியாக அளவு இருக்கிறது. எனவே, இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

அடுத்ததாக அசைவ உணவுகளைப் பற்றி பார்ப்போம்…..

* அசைவ உணவுகளில் சர்க்கரை நோயாளிகள் மீனை தாராளமாக சாப்பிடலாம். கோழியை அளவோடு சாப்பிடலாம். ஆனால், மட்டனைத் தொட்டுக் கூட பார்க்கக் கூடாது. ஏனெனில், மட்டனில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது.

* மேலும், அதிக கொழுப்புச் சத்து உள்ள சர்க்கரை நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply