சருமம் பளபளப்பாக உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள்

Loading...

சருமம் பளபளப்பாக உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள்எண்ணற்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி எந்த பலனும் கிடைக்காமல் நொந்து போய்விட்டீர்களா? அழகு சாதன பொருட்களின் பலன் விளம்பரங்களில் மட்டும் தான் பயனளிக்கும். மற்றபடி 50% கூட விளம்பரங்களில் காண்பிப்பது போல பயன் தராது. ஆனால், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் சருமம் பளபளப்பாக சீரிய பயனளிக்கிறது…

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து நிறையவே இருக்கிறது. இது கொலஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களது சருமம் தளர்வடையாது மற்றும் நல்ல பொலிவடையும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது.

ஆப்பிளில் குறைவற்ற வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது சருமத்தின் ஆழத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைக் கொல்லும் திறன் வாய்ந்தது. தினம் ஒரு ஆப்பிளை உட்கொள்வதன் மூலம் உங்களது சருமம் பொலிவடையும். மற்றும் ஆப்பிள் ஜூஸை முகத்தில் தடவி 1௦ நிமிடம் கழித்து முகம் கழுவினால் சருமம் புத்துணர்ச்சிப் பெறும்.

உங்களது உடலில் எவ்வளவு அதிகம் ஆன்டி-அக்ஸிடன்ட் உள்ளதோ அவ்வளவு அளவு சருமம் பொலிவுப் பெறும். பீட்ரூட்டில் உள்ள அதிக ஆன்டி-அக்ஸிடன்ட் உங்களது சருமம் பொலிவடைய நன்கு உதவுகிறது. மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கவும் வெகுவாகப் பயனளிக்கிறது பீட்ரூட். காரட் நமது அன்றாட உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவாகும்.

இதில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலில் வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமம் நன்கு பொலிவடையும் மற்றும் காரட் சருமம் சுருக்கமடையாமல் இருக்கவும் உதவுகிறது.

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நற்குணம், உங்களது சருமத்தை கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் வடுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது. பூசணியில் உள்ள சின்க்கின் (zinc) தன்மை சருமத்தில் புதிய செல்களை உருவாக்கிட பெருமளவில் உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது.

பசலைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைக்கவும், முகத் தசைகளை வலுவடையச் செய்யவும் உதவுகிறது. மற்றும் இதன் நற்குணங்கள் சருமத்தில் இருக்கும் நச்சுகளை அழித்து சருமம் தெளிவடையவும், பொலிவடையவும் நன்கு பயனளிக்கிறது. ஸ்ட்ராபெரியில் இருக்கும் மாலிக் அமிலத்தின் தன்மை இயற்கையாகவே சருமம் வெண்மையடைய உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை ஆரோக்கியமடைய வெகுவாக உதவுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி’யின் நற்குணங்கள் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் பருக்களை குறைக்க உதவுகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து உண்பது மிக சிறந்ததாகும். தக்காளியில் இருக்கும் லைக்கொப்பீன் எனும் உயர்ரக ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்தை பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது. இதை உணவில் அல்லது உணவுக்கு முன் சூப்பாக உட்கொள்வது நல்லது. இயற்கையாகவே தக்காளியை உட்கொள்வதன் மூலம் சருமம் பிரகாசிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply