சருமத்திற்கு பொலிவை தரும் கிரீன் டீ ஸ்க்ரப்

Loading...

சருமத்திற்கு பொலிவை தரும் கிரீன் டீ ஸ்க்ரப்கிரீன் டீ உடல் எடை குறைக்க மட்டுமல்ல சருமத்திற்கும் பொலிவையும் தரக் கூடியது. உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய விரும்புபவர்கள் கிரீன் டீ ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இந்த கிரீன் டீ ஸ்க்ரப் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.

ஸ்க்ரப் செய்வதால் உங்கள் சருமம் பாழாகாது, சரும துவாரங்களில் அடைத்திருக்கும் அழுக்குகளை அகற்றவே இதனை உபயோகப்படுத்துகிறோம். அதன் பின்னர் மாய்ஸ்ரைஸர் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கெடுதலையும் தராது.தேவையான பொருட்கள் :

கிரீன் டீ பேக் – 2
தேன் – 1 டீ ஸ்பூன்

கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள். இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும். முயன்று பார்த்து கருத்திடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply