சருமத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் தேன் ஃபேஸ் பேக்

Loading...

சருமத்தின் பிரச்சனைகளை தீர்க்கும் தேன் ஃபேஸ் பேக்* ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சந்தனம், சின்ன ஸ்பூன் கடலைமாவு, பால் ஆடை ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பன்னீர், இவை அனைத்தையும் கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் சருமம் மிருதுவாக மாறும்.

* அரை ஸ்பூன் பால் பொடி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இதனால் வெயிலால் ஏற்பட்ட கருப்பு நிறம் படிப்படியாக மாறும்.

* ஒரு சின்ன ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் பவுடர், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், இதை மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து கொண்டால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

* எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு ஒரு பெரிய ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

* இரண்டு ஸ்பூன் கடலைமாவும் ஒரு சின்ன ஸ்பூன் தேனும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி சிறிய மசாஜ் கொடுத்து 3 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிளாக் ஹோட்ஸ் படிப்படியாக நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply