சத்தான வாழைத்தண்டு பொரியல்

Loading...

சத்தான வாழைத்தண்டு பொரியல்
தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 1 (சிறியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மோர் – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)


செய்முறை:

முதலில் வாழைத்தண்டின் மேல் பகுதியை நீக்கி, அதனை பொடியாக நறுக்கி மோரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு பாசிப்பருப்பை நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, நீரில் நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து 3 நிமிடம் வதக்கி விட வேண்டும். அதற்குள் மோரில் ஊற வைத்துள்ள வாழைத்தண்டை வடிகட்டியில் போட்டு, நீரை முற்றிலும் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வாணலியில் வாழைத்தண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, மூடி வைத்து வாழைத்தண்டை நன்கு வேக வைக்க வேண்டும்.

வாழைத்தண்டானது நன்கு வெந்து அதில் உள்ள நீர் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சத்தான வாழைத்தண்டு பொரியல் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply