சக்கரைவள்ளிக் கிழங்கு பிட்டு

Loading...

சக்கரைவள்ளிக் கிழங்கு பிட்டு
தேவையான பொருட்கள் :

சக்கரைவள்ளிக் கிழங்கு – 500 கிராம்

தேங்காய்த் துருவல்- 4தேக்கரண்டி

உலர் திராட்ச்சை – 6
நறுக்கிய முந்திரியப் பருப்பு – 1 தேக்கரண்டி

நறுக்கிய பாதாம் பருப்பு – 1 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி சிறிதளவு

பொடித்த வெல்லம் – 4 தேக்கரண்டி

நெய் – 3 தேக்கரண்டி


செய்முறை:

* சக்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து துருவிக் கொள்ளவும்.

* அத்துடன் பொடித்த வெல்லத்தைக் கலக்கவும்.

* வாணலியில் நெய் ஊற்றி பாதாம்,முந்திரி,திராட்ச்சை, தேங்காய்த் துருவல் போன்றவற்றை கொட்டி வதக்கவும்.

* அதை வேக வைத்து துருவிய சக்கரைவள்ளிக் கிழங்கை போட்டு கிளறி பரிமாறவும் . சவையான சக்கரைவள்ளிக் கிழங்கு பிட்டு தயார்.

இது குழந்தைகளுக்கு உகந்த மாலை நேர உணவாக கொடுக்கலாம்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply