கோழிக்குழம்பு

Loading...

கோழிக்குழம்பு
என்னென்ன தேவை?

சிக்கன் -அரை கிலோ ,

சிறிய வெங்காயம் -1 கப்

நறுக்கிய தக்காளி -1 கப்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

மல்லித் தூள் – 3 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்

உப்பு-தேவையான அளவு
தாளிக்க :

வெந்தயம் -கால் ஸ்பூன்

சோம்பு -கால் ஸ்பூன்

பட்டை -கிராம்பு

பிரியாணி இலை – தேவையான அளவு

கறிவேப்பிலை-தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு


அரைக்க :

சோம்பு-கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

மிளகு -கால் ஸ்பூன்

பச்சை அரிசி -கால் ஸ்பூன்

பூண்டு-ஒரு பல்

கிராம்பு- இரண்டு

(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்).


எப்படி செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.

அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

அந்த மசாலாவை நறுக்கிய சிக்கன் துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும். வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் வேகவிடவும்.

கோழி நன்றாக வெந்தவுடன் பொடித்து வைத்து இருக்கும் மசாலாவை கொதித்து கொண்டு இருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும். சூடான கோழிக்குழம்பு ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply