கோதுமை மோர்க்கூழ்

Loading...

கோதுமை மோர்க்கூழ்
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 2 கப்

கோதுமை மாவு – 1 கப்

தண்ணீர் – 2 கப்

மோர் – 2 கப்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

பெருங்காயம் – 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

உ.பருப்பு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித் தழை


செய்முறை::

* அரிசி மாவு, கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். * எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றவும். * கொதிவந்தவுடன் உப்பைப் போட்டு கரைத்து வைத்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும். * கொஞ்சம் கெட்டியானவுடன் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும். * மோர் கூழில் ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும். * உடல் இளைக்க விரும்புபவர்கள் மதிய நேரத்திற்கு சாப்பிட உகந்தது இந்த மோர்க்கூழ்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply