கோங்குரா சிக்கன்

Loading...

கோங்குரா சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கன்- ½ கிலோ
பெரிய வெங்காயம்-2
கசகசா-1 டீஸ்பூன்
கரம் மசாலா-1 டீஸ்பூன்
சீரகத்தூள்-2 டீஸ்பூன்
தனியாத் தூள்-2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன்
மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு
கோங்குரா இலை-1 பிடி


செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றவும்.
கோங்குரா சிக்கன் செய்வது எப்படி
எண்ணெய் சூடேறியதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும், மிளகாய்த் தூளையும் போட்டு பொன்னிறம் வரும்வரை வதக்கவும்.

அத்துடன் கழுவி, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

சிக்கன் சற்று வதங்கியதும் அரைத்த கசகசா, கரம் மசாலா, சீரகப் பொடி, மல்லிபொடி முதலியவற்றைப் போட்டு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி சிக்கனை நன்கு வேக வைக்கவும்.

கோங்குரா இலையை சுத்தம் செய்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

சிக்கன் நன்கு வெந்ததும் அரைத்த கோங்குராவை கொட்டி மசாலா கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply