கோகனட் ராகி லட்டு

Loading...

கோகனட் ராகி லட்டு
தேவையானவை:
தேங்காய்த் துருவல் – கால் கப், கேழ்வரகு மாவு – ஒரு கப், பாதாம், முந்திரி, பேரீச்சை – தலா 10, நெய் – தேவையான அளவு, சர்க்கரை – ஒரு கப்.

செய்முறை:
சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக்கவும். பாதாம், முந்திரியை சிறுசிறு துண்டுகளாக்கவும். பேரீச்சையின் விதைகளை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு… பாதாம், முந்திரி, பேரீச்சை துண்டுகளை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் கேழ்வரகு மாவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவிடவும்.
தேங்காய்த் துருவலையும் சிறிது நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவு, வறுத்த பாதாம், முந்திரி, பேரீச்சை, தேங்காய்த் துருவல் மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு நெய்யை காயவிட்டு மாவுடன் கலந்து, சூடாக இருக்கும்போதே சிறிய உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.
ஹெல்தியான டெசர்ட் இது!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply