கொண்டைக் கடலை புலாவ் ரெசிபி

Loading...

கொண்டைக் கடலை புலாவ் ரெசிபி
தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை – 1 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 6
கிராம்பு – 5
பட்டை – 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் – 1
பாசுமதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
புலாவ் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்தாக வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, மிளகாய் தூள் மற்றும் புலாவ் மசாலா சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும், அதில் பாசுமதி அரிசியை கழுவி அதோடு சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.

இதோ ருசியான கொண்டைக் கடலை புலாவ் தயார்!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply