கூந்தல் உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ்

Loading...

கூந்தல் உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ்பெண்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையே, தாங்கள் ஆசையாக வளர்ந்த கூந்தல் உதிர்வது தான்.

இதோ உங்களுக்கு ஒரு சூப்பர் டிப்ஸ்,

கேரட்டின் இலை கூந்தலுக்கு அருமையான கண்டிஷ்னர். கேரட் இலைகளைத் துண்டுகளாக்கி, வேண்டிய அளவில் நல்லெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து பயத்தமாவைப் போட்டு அலசுங்கள். இப்போது பாருங்கள் கூந்தல் வெடிப்பு நீங்கி, பரட்டைத் தலை பளிச்சென்று காட்சி தரும்.இதையே தைலமாகவும் செய்து வைத்துக் கொள்ளலாம்.
அரை கிலோ நல்லெண்ணெயை மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சுங்கள்.
இதில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் மிளகு, நறுக்கிய கேரட் இலைகள். இவற்றைப்போட்டு நன்றாக வாசனை வரும்போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஆறியதும் வடிகட்டி, தனியே ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இரு முறை இதைத் தலைக்குத் தேய்த்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு அலசுங்கள்.
இதனால் கருகருவென கூந்தல் அடர்த்தியாவதுடன், முடி உதிர்வதும் கட்டுப்படும். இந்த எண்ணெயை புருவம், கண் இமைகளில் தடவினால், முடி அடர்த்தியாக வளரும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply