கூகுள் நிறுவன தயாரிப்பில் பேமிலி லைப்ரரி

Loading...

கூகுள் நிறுவன தயாரிப்பில் பேமிலி லைப்ரரிகூகுள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான அன்ரோயிட் இயங்குதளமானது இன்று அதிகளவு சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இவ் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய ஏராளமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியினை கூகுள் பிளே தளம் தருகின்றது.
இத் தளத்தில் புதிய வசதியான ஃபேமிலி லைப்ரரி (Family Library) கடந்த மே மாதத்தின் இறுதிப் பகுதியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இவ் வசதியின் ஊடாக திரைப்படங்கள், அப்பிளிக்கேஷன்கள், புகைப்படங்கள் உட்பட மேலும் பல அம்சங்களை குடும்பத்தவர்களுடன் அல்லது குழுவினருடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
தற்போது இவ் வசதியானது US, UK, Canada, Australia, New Zealand, Brazil, France, Germany, Ireland, Italy, Japan, மற்றும் Mexico போன்ற பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இவ் வசதியின் ஊடாக அதிகபட்சம் 6 நபர்களுடன் மட்டுமே குறிப்பிட்ட அம்சங்களை பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply