குழந்தைகளுக்கு இப்படி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்

Loading...

குழந்தைகளுக்கு இப்படி இட்லி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
தேவையான பொருட்கள் :

இட்லி – 6

காஷ்மீரி மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

கார்ன்ஃப்ளார் மாவு – 25 கிராம்

இஞ்சி – பூண்டு விழுது – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 15 இலை

மைதா மாவு – 40 கிராம்

சோயா சாஸ் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – அரை டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

ஓமப்பொடி – அரை டீஸ்பூன்

எண்ணெய் – 100 மில்லி

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சைப் பழம் – ஒன்றில் பாதி

பெரிய வெங்காயத் துண்டுகள் – அலங்கரிக்க


செய்முறை :
* ஒவ்வொரு இட்லியையும் தலா ஆறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, சீரகத்தூள், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமப்பொடி, இஞ்சி-பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

* இந்தக் கலவையில் இட்லித் துண்டுகளை சேர்த்துக் உடையாமல் மெதுவாக கலக்கவும்.

* கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பிரட்டி வைத்த இட்லிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* கறிவேப்பிலையைத் தனியாக பொரித்தெடுக்கவும்.

* பொரித்த இட்லித் துண்டுகளின் மேலே கறிவேப்பிலையைத் தூவி எலுமிச்சை மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காய்த்துண்டுகளுடன் பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply