குழந்தைகளின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மசாஜ்

Loading...

குழந்தைகளின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மசாஜ்மசாஜ் செய்வதால் உங்கள் குழந்தைக்கு கூடுதலாக பல பயன்களும் கிடைக்கக்கூடும்.குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து விடுதல். அது உங்கள் குழந்தையை இதப்படுத்தும். அதனால் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மசாஜ் செய்வதால் உங்கள் குழந்தைக்கு கூடுதலாக பல பயன்களும் கிடைக்கக்கூடும்.
உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளர்வதால் ஏற்படும் வலியை சுலபப்படுத்துதல் போன்ற பயன்களை அளிக்கும்.
உங்கள் குழந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்த உங்களுக்கும் உங்கள் துணைக்கும் சிறந்த வழியாக இருப்பது மசாஜ். குழந்தைக்கும் அது சொகுசை அளித்திடும்.
குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்தால், மஞ்சள் காமாலையில் இருந்து அவர்கள் வேகமாக மீண்டு வருவார்கள்.
குழந்தை தூங்கி எழுந்தவுடன் மசாஜ் செய்வதும் சரியான நேரமாக இருக்காது. குழந்தை விழித்திருக்கும் போது மசாஜ் செய்வதே சரியான நேரமாகும்.
மசாஜை எப்போது முடித்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தையே உங்களுக்கு சொல்லும். அதேப்போல் மசாஜில் எது பிடித்திருக்கிறது, எது பிடிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டி விடும்.
மசாஜ் செய்யும் போது குழந்தை அழ ஆரம்பித்து விட்டால், அது போதிய மசாஜ் பெற்று விட்டதாக அர்த்தமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply