குறைந்த விலையில் நிறைவான பயன்கள் லெனோவோ வைப் k5

Loading...

குறைந்த விலையில் நிறைவான பயன்கள் லெனோவோ வைப் k5பட்ஜெட் மொபைல்களின் போட்டியில் லெனோவோ என்றும் டாப் தான். வாடிக்கையாளர்கள் பெறும் லாபம் என்னவென்றால் குறைவான விலையில் பிராண்டட் மொபைல்.

சில மாதங்களுக்கு முன் ‘k5 பிளஸ்’ என்ற மாடல் சந்தையில் அறிமுகமானது. தற்போது அதை விட குறைவான விலையில் ‘வைப் k5’ மொபைலை அறிமுகபடுத்தியுள்ளது லெனோவோ.

2ஜிபி ரேம், 16ஜிபி இன்டெர்னல் மெம்மரி, 1.4 GHZ, 64 பிட் கோல்காம் ஸ்நேப்டிரேகன் ஆக்டோகோர் ப்ராசஸர், 5இன்ச் டிஸ்ப்ளே, 294 பிக்சல் கிளாரிட்டி, கமெரா 13 மெகாபிக்சல், ஃப்ரன்ட் 5 மெகாபிக்சலில் சும்மா அசத்தி உள்ளனர் லெனோவோ குடும்பத்தினர்.

மேலும் டால்பி அட்மோஸ் டெக்னாலஜியுடன் கூடிய இரண்டு ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. டூயல் சிம், மேலும் இதன் எடை 142 கிராம் மட்டுமே, இது 2750mAh பேட்டரியில் இயங்குகிறது.

ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மென்பொருளில் இயங்கும் இந்த மொபைல் அமேசான் தளத்தில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கிறது. மேலும் கோல்டு, சில்வர், கிரே என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

இதனுடைய ஸ்பெஷாலிட்டி ‘வைப் k5’விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் VR ஹெட்செட் பொருத்தி விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோக்களை கண்டு மகிழலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply