குயிக் கொத்சு

Loading...

குயிக் கொத்சு

தேவையானவை:

கத்திரிக்காய் – 5,
சாம்பார் வெங்காயம் – 10 அல்லது 15,
தக்காளி – 3,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
கோஸ் – சிறிதளவு,
கெட்டியான புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை

* கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கோஸ் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி, உப்பு… மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்க்கவும்.
* இதை குக்கரில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு… 5 அல்லது 6 விசில் வந்ததும் இறக்கவும்.
* பின்பு கரண்டியால் நன்கு மசிக்கவும்.
* எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துக் கலந்து உபயோகப்படுத்தவும்.
* இது இட்லிக்கு சூப்பர் காம்பினேஷன்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply