கீரை வெஜிடபிள் சமோசா

Loading...

கீரை வெஜிடபிள் சமோசா
தேவையானவை:
மைதா மாவு – 200 கிராம், பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கோஸ் துருவல் – 4 டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – இரண்டு, எண்ணெய் – 250 மில்லி, கரம் மசாலாத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னாங்கண்ணிக்கீரை, வெங்காயம், கோஸ் துருவல், கேரட் துருவல் ஆகியவற்றை வதக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
வதக்கிய கீரை மற்றும் காய்களுடன், மசித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மைதா மாவை, சின்ன உருண்டைகளாக உருட்டி, சிறிய வடிவில் இட்டு உள்ளே கீரை – வெஜிடபிள் உருண்டைகளை வைத்து சமோசா வடிவில் மூடவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, சமோசாக்களை பொரித்து எடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply