கீரை கேக்

Loading...

கீரை கேக்
தேவையானப் பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 75 கிராம்
சிறிய மிளகாய் – 4
இட்லி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

முருங்கைக் கீரை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் துருவல் – 1/2 கப்


செய்முறை

முதலில், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாகவும், கடலை பருப்பை தனியாகவும் சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முருங்கை கீரையை சுத்தமாகக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஊற வைத்த பருப்புகளை தண்ணீரை வடித்து விட்டு மிளகாய், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்து இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்து வைத்துள்ள கலவையுடன் நறுக்கியக் கீரை, இட்லி மாவு சேர்த்து கலந்து வைத்துப் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவு கலவையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும்.

அடுத்ததாக, ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் மாவுக் கலவையை கொட்டி பரப்பிவிட்டு, ஆவியில் வேக வைத்து எடுத்து சற்று நேரம் ஆற வைத்து விருப்பமான வடிவில் கீறி பரிமாறலாம்.

இதற்கு சைட்டிஷ் ஆக இட்லி மிளகாய் பொடி சூப்பராக இருக்கும். சைட்டிஷ் இல்லாமல் கூட இதை சாப்பிடலாம். கண்டிப்பாக நீங்கள் ட்ரை செய்து சாப்பிட வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply