கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ்

Loading...

கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ்
என்னென்ன தேவை?

* பீன்ஸ் – அரைக் கிலோ
* மைதா மாவு – ஒரு கப் + அரை கப்
* ப்ரட் க்ரம்ஸ் – ஒரு கப்
* பார்மஜான் சீஸ் – கால் கப்
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு


எப்படிச் செய்வது?

பீன்ஸை அடி மற்றும் நுனி பகுதியை நறுக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

step 1

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

step 2

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் சிறிது உப்பு போட்டு நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸை போட்டு 2 – 3 நிமிடம் வேக விடவும்.

step 3

அதன் பிறகு மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீருடன் சில ஐஸ் கட்டிகளை போட்டு எடுத்துக் கொள்ளவும். அதில் வேக

வைத்த பீன்ஸை போடவும். இதுப் போல் குளிர்ந்த தண்ணீரில் போடுவதால் பீன்ஸை மேலும் வேகாமல் பார்த்துக் கொள்ளவும்

மற்றும் பீன்ஸின் நிறம் மாறாமல் இருக்கவும் உதவுகிறது.

step 4

5 நிமிடம் கழித்து பீன்ஸை தண்ணீரிலிருந்து எடுத்து நன்றாக வடிக்கட்டவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் மைதா

மாவை போட்டு 2 கப் தண்ணீர் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். (விரும்பினால் மைதா

மாவிற்கு பதில் முட்டை உபயோகிக்கலாம்). ஒரு தட்டில் ப்ரட் க்ரம்ஸுடன் பார்மஜான் சீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

step 5

அதன் பின்னர் ஒரு பீன்ஸை எடுத்து மைதா மாவில் (தனியாக கொடுத்துள்ள அரை கப் மாவு) போட்டு பிரட்டி விட்டு அதனை

கரைத்து வைத்திருக்கும் மைதா மாவில் போட்டு எடுக்கவும்.

step 6

மைதா மாவில் தோய்த்து எடுத்த பீன்ஸை ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

step 7

இதைப் போல் எல்லா பீன்ஸையும் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

step 8

அந்த தட்டை ப்ரிட்ஜில்(freezer) 1 – 2 மணி நேரம் வைக்கவும். இப்படி ப்ரிட்ஜில் வைப்பதால் ப்ரட் க்ரம்ஸ் எண்ணெயில்

பொரிக்கும் போது உதிராமல் இருக்கும்.

step 9

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பின்னர் பீன்ஸை எடுத்து பொரிக்கவும்.

step 10

சுவையான கிட்ஸ் க்ரிஸ்பி க்ரீன் பீன்ஸ் ரெடி. இதனை சாஸுடன் அல்லது ப்ளு சீஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

step 11

இதனை குறைந்தது 2 – 3 நாள் முன்னதாகவே செய்து வைத்து பின் விருந்தினர் வரும் பொழுது ப்ரிஜில்(Freezer) இருந்து

எடுத்து பொரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply