காேதுமை மசாலா சிப்ஸ்

Loading...

காேதுமை மசாலா சிப்ஸ்

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்கொத்தமல்லி தழை – சிறிதளவுமிளகாய் தூள் – அரை ஸ்பூன்மஞ்சள் தூள் – சிறிதளவுஓமம் – ஒரு சிட்டிகைதனியா தூள் – அரை ஸ்பூன்சீரகத்தூள் – அரை ஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவைக்குவெண்ணெய் – 3 ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் வெண்ணெய், ஒமம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரகத்தூள், உப்பு, பொடியாக நறுக்கி கொத்தமல்லி தழை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். (மாவை சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.)* மாவை சப்பாத்திகளாக தேய்த்து கத்தியால் முக்கோண வடிவில் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெட்டி வைத்துள்ள துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.* சுவையான கோதுமை மசாலா சிப்ஸ் ரெடி.* இதை மாலை நேரத்தில் சுக்கு காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது. இதை செய்து ஆறிய பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply