காளானின் மருத்துவ குணங்கள்

Loading...

காளானின் மருத்துவ குணங்கள்காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.
பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளானில் சோடியம், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரச்சத்து, அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் செய்து குடித்து வந்தால் பருத்த உடலை பெறலாம். காளான் உணவுகள் எளிதில் ஜீரணம் அடைவதோடு மட்டுமில்லாமல், மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. காளான் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உள்ள கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. இதயத்தின் இயக்கத்தை சீரான முறையில் செயல்படுத்த காளான் முக்கிய பங்கு வகிக்கிறது.

காளான் மூட்டு வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. மலட்டுத்தன்மை உள்ள பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களை குணப்படுத்துகிறது. சமீபத்திய ஆராய்ச்சி மூலம் காளான், பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயை தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தை காளான் அளிக்கிறது. காளானை முட்டைக்கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அதை தினந்தோறும் சாப்பிட்டு வர வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புப் பொருட்களை கரைக்கும் தன்மை உடையது.

குறிப்பு

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply