காலை எழுந்ததும் களைப்பாக உணர்கிறீர்களா அதற்கான காரணங்களும் போக்கும் வழிகளும் பற்றி பார்ப்போம்

Loading...

காலை எழுந்ததும் களைப்பாக உணர்கிறீர்களாஅதற்கான காரணங்களும், போக்கும் வழிகளும்தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் இந்த நாள் இனிய நாளாக, நல்ல நாளாக அமைய வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். மாறாக அன்றைய நாள் களைப்பாக ஆரம்பித்தால் நமக்கே கடுப்பாக இருக்கும். இதற்குக் காரணம் சரியாக தூங்கவில்லை என்று நாம் நினைப்போம் அல்லது இரவு நேரம் கழித்து தூங்கியது தான் காரணம் என்று நினைப்போம்.
ஆனால், காரணம் அதுவல்ல, உடலில் தோன்றும் ஒரு சில பிரச்சனைகளால் தான் உடல் களைப்படைகிறது. என்னென்ன காரணங்களால் உடல் களைப்படைகிறது என்றும் எப்படி அதில் இருந்து விடுபடலாம் என்று இப்போது பார்ப்போம் வாருங்கள்.

மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஒரு முக்கியமான காரணமாகும். இந்த சமையத்தில் மூளையானது சுறுசுறுப்பாக செயல்படாது. இதில் இருந்து விடுபட விரும்பினால் நண்பர்களுடன் வெளியே செல்லலாம், பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடலாம் அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளை உண்பதால் உடல் மந்தமாக இருக்கும். கலோரிகள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். துரித உணவுகளைத் தொடர்ந்து உண்டு வந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவது தவிர உடல் பருமன் அடைவதையும் தவிர்க்க முடியாது. எனவே, பாஸ்ட் புட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய காலத்தில் பலர் வேலைக்கு போகும் அவசரத்தில் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். இரவு 8 மணி நேரத் தூக்கத்திற்குப் பிறகு உடலுக்குத் தேவையான ஆற்றலானது காலையில் நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. இதனை தவிர்க்கும் போதுதான் உடலானது களைப்பாகிறது. எனவே, காலை உணவை மட்டும் எப்போதும் தவிர்க்காதீர்கள்.

நம் உடலுக்கு இன்றியமையாதது தண்ணீர். அத்தகைய தண்ணீர் போதுமான அளவு நம் உடலில் இருந்தால் தான் உடலின் ஆற்றல் அளவை சீராகப் பராமரிக்க முடியும். சரியான அளவில் தினமும் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலின் செயல்பாடுகள் இல்லாமல், உடல் உள்ளுறுப்புகள் வறட்சி அடைந்து சரியாக செயல்படாமல் போகும். இதனால் உடலானது சோர்வடையும். இனிமேலாவது தினமும் குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.

வைட்டமின் பி 12 சத்துக்கள் குறைவாக இருந்தால் கூட உடலில் மந்த நிலை ஏற்படும். எனவே, இந்த வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply