காலிஃபிளவர் சட்னி

Loading...

காலிஃபிளவர் சட்னி

தேவையான பொருட்கள் :
காலிஃபிளவர் – ½ கிலோ ,சோம்பு – 1 டீஸ்பூன் ,தேங்காய் – ½ முடி (சிறியது) ,ஏலக்காய் – 1 ,இஞ்சி – 1 சிறிய துண்டு ,மிளகாய் வற்றல் – 6 ,பூண்டு – 5 பல் ,எண்ணெய் – 1 குழிக்கரண்டி ,கிராம்பு – 1 ,கசகசா – 1 மேஜைக்கரண்டி ,பட்டை – 1 ,சின்னவெங்காயம் – 20 ,தக்காளி – 1 ,முந்திரிப்பருப்பு – 10 ,குடைமிளகாய் – 1 (சிறியது) ,உப்பு – தேவையானது


செய்முறை :
* காலிஃபிளவர், குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின் குடைமிளகாய், காலிஃபிளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கவும்.
* சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்.
* சப்பாத்தி இட்லிக்குத் தொட்டு சாப்பிடலாம். தேங்காயை பால் எடுத்தும் ஊற்றலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply