கழுத்து வலியா இனி கவலை வேண்டாம்

Loading...

கழுத்து வலியா இனி கவலை வேண்டாம்அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கியமாக கணனி முன் உட்காரும் பெரும்பாலான மக்கள் அவதிப்படுவது கழுத்து வலியால் தான். இதற்கான சில முதலுதவிகளை இங்கே காணலாம்.

மனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.
தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.
அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும் போதும் நேரான கோணத்தில் அமரவும்.
நெடுநேரம் தொடரும் `டிரைவிங்’கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.
குப்புறப்படுக்காதீர்காதீர்கள் (வயிறு தரையில் படும்படி) இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.
உறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம்.
மேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.
கழுத்து வலிக்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். இதற்கான யோகா பயிற்சிகளும் உள்ளன. இவை கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply