கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகள் | Tamil Serial Today Org

கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகள்

Loading...

கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் உணவுகள்உடலின் பல்வேறு செயல்பாட்டிற்கு உதவும் கல்லீரலின் முக்கிய வேலை, உடலில் உள்ள நச்சுக்களை பிரித்து வெளியேற்றுவது தான். அப்படி நச்சுக்களை பிரிக்கும் கல்லீரலில் இருந்து நச்சுக்கள் முற்றிலும் வெளியேறாமல் இருந்தால், அதனால் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

எனவே கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும் மற்றும் கல்லீரலில் சேரும் நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றும் உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வருவது மிகவும் இன்றியமையாதது. இக்கட்டுரையில் கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட உதவும் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


பூண்டு

பூண்டில் சல்பர் அதிகம் உள்ளது. எனவே அன்றாட உணவில் பூண்டை சேர்த்து வந்தால், கல்லீரலில் சேரும் நச்சுக்கள் வெளியேற்றப்படும். இதனால் கல்லீரல் நன்கு செயல்படும்.


பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பெக்டின் என்னும் பொருள் கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் தடுக்கும். மேலும் நச்சுக்கள் இருந்தாலும் அவற்றை முற்றிலும் வெளியேற்றிவிடும்.


வெங்காயம்

அன்றாட உணவில் தவறாமல் சேர்க்கும் வெங்காயமும் கல்லீரலை சுத்தப்படுத்தும். எனவே வெங்காயத்தை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வாருங்கள். ஏனெனில் இதிலும் சல்பர் அதிகம் உள்ளது.


முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் கல்லீரல் சுத்தமாக இருப்பதோடு, எவ்வித இடையூறும் இல்லாமல் சீராக இயங்கும்.


கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் நியாசின் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான சத்துக்களாகும். அதிலும் கேரட்டில் உள்ள நியாசின் டாக்ஸின்களை உடைத்து எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவி, கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வழிவகுக்கும்.

Loading...
Rates : 0
VTST BN