கறிப் பொடி & வாழைக்காய் பொடிக்கறி

Loading...

கறிப் பொடி & வாழைக்காய் பொடிக்கறி
கறிப்பொடி- தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
தனியா/கொத்துமல்லி-1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்- 8(காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும். :))
பெருங்காயத் தூள் -1/4டீஸ்பூன்


செய்முறை
எல்லாப் பொருட்களையும் மிதமான தீயில் கருகாமல் வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்த அளவிற்கு சுமார் 1/4கப் அளவிற்கு பொடி கிடைக்கும். மற்ற காய்கறிகளுக்கும் உபயோகிக்கலாம். உருளை- கத்தரி – சேப்பங்கிழங்கு, மற்றும் விரும்பின காய்களில் முயற்சித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன். செய்து பார்த்தா நீங்களும் சொல்லுங்க.

வாழைக்காய் பொடிக்கறி -தேவையான பொருட்கள்

வாழைக்காய்-11/2
புளித்தண்ணீர்- 1/4கப்பிற்கும் குறைவாக
கறிப்பொடி -1டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப கூட்டிக் குறைக்கலாம். :))
நல்லெண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை

புளித்தண்ணீருடன் 13/4கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
வாழைக்காயைத் தோல் சீவி சிறுதுண்டுகளாக நறுக்கி, நீரில் அலசி கொதிநீரில் சேர்த்து வேகவிடவும்.
கறிப்பொடியை அரைத்து வைக்கவும்.
வாழைக்காய் (குழையாமல்) வெந்து வந்ததும் நீரை வடித்து வைக்கவும்.
நல்லெண்ணெயைக் காயவைத்து கடுகு-உளுந்து-கறிவேப்பிலை தாளித்து, வெந்த வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
காய் வதங்கும்போதே கரண்டியால் லேசாக மசித்து விடவும். பிறகு கறிப்பொடி, தேவையான உப்பையும் சேர்த்து கிளறவும்.
கரண்டியால் வாழைக்காய்த்துண்டுகளை லேசாக உடைத்து விட்டு, மிதமான சூட்டில் வதக்கவும்.
காரசாரமான வாழைக்காய் பொடிக்கறி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply