கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி

Loading...

கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதிஇளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். என நோர்வே பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ட்ரினே என்பவர் கூறியிருக்கிறார்.
அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன் செய்யும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்ப காலத்தில் பிரச்சினை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பெற்றபின்னும் தாய்- சேய் இருவர் உடல் நலனும் பாதிக்கும் எனவும் கூறுகிறார். ஆகவே உடல் பருமனை கட்டாயம் குறைக்க பெண்கள் முற்படவேண்டும்.
கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்ததை எப்போதும் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மிக அவசியம். உடல் பருமனானவர்கள் என்றில்லாமல் எல்லா பெண்களும் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறுகின்றார்.
உடற்பயிற்சி எந்த அளவு கர்ப்ப காலத்தில் உதவி செய்யும் என ஆய்வு ஒன்றை நடத்தினர். இதில் உடல் பருமனான கர்ப்பிணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டனர்.
முதல் குழுவில் 91 கர்ப்பிணிகளுக்கு மிதமான உடற்பயிற்சிகள் தரப்பட்டன. 20 நிமிடங்கள் ட்ரெட்மில்லில் நடைபயிற்சி, தசைகளை வலுவாக்க சில பயிசிகள் தரப்பட்டன. இவர்களுக்கு இந்த உடற்பயிற்சிகள் கொடுத்து 3 வாரங்கள் கண்காணிப்பட்டார்கள்.
இன்னொரு குழுவிற்கு எந்த வித உடற்பயிற்சியும் தரப்படாமல், அவர்களை கண்காணித்தனர். இவர்களில் முதல் குழுவில் வெறும் 2 பேருக்கும், இரண்டாவது குழுவில் 9 பேருக்கும் சர்க்கரை வியாதி இருந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply