கருவளையத்தை நீக்க சில அழகுக் குறிப்புக்கள்

Loading...

கருவளையத்தை நீக்க சில அழகுக் குறிப்புக்கள்கண்ணைச் சுற்றிலும் பலருக்கு கருவளையம் போன்று இருக்கும். இது, அவர்களின் அழகை குறைத்து விடும். கீழேயுள்ள அழகுக் குறிப்புக்களை தொடர்ந்து செய்வதின் மூலம் கருவளையங்களை போக்கமுடியும்.
* தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனத்தை கலந்து பசைபோல் ஆக்கி, தினமும் கண்ணின் கீழ் பகுதியில் தடவி, 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால், ஓரிரு மாதங்களில், கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
* கருவளையத்திற்கு உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல, முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி தோல் பளிச்சிடும்.
* கற்றாழை ஜெல்லும் கருவளையத்தை போக்கும். ஜெல்லால், கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக, ‘மசாஜ்’ செய்து விடுங்கள். வட்ட வடிவில், மசாஜ் செய்ய வேண்டும்.
* குளிப்பதற்கு முன், சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால், கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.
* கண்களின் சோர்வு நீங்க, மற்றொரு நல்ல இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply