கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்

Loading...

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்கரிசலாங்கண்ணி கீரை வயல் வரப்புகளிலும், வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடியது.
இச்செடியின் காம்புகள் சிவப்பாக இருக்கும். இலைகள் சுரசுரப்பாகவும் நீண்டும் காணப்படும்.
இதன் பூக்கள் வெள்ளையாக இருக்கும். இதன் வேறொரு வகை செடியின் பூக்கள் மஞ்சளாக இருக்கும்.
100 கிராம் கரிசலாங்கண்ணி கீரையில் நீர் – 85%, மாவுப்பொருள்- 9.2%, புரதம்- 4.4%, கொழுப்பு- 0.8%, கால்சியம்- 62 யூனிட், இரும்புத்தாது- 8.9 யூனிட், பாஸ்பரஸ்- 4.62% சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் அதிகமாக நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள் மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய சாறை எடுத்து தினமும் ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமடையும். கரிசலாங்கண்ணி கீரையை நெல்லிக்காய் அளவு அரைத்து மோரில் கரைத்து அதை கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு கொடுத்தால் அது நாளடவில் குணமாகிவிடும். மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலையை வேகவைத்து அதை வடிக்கட்டி குடித்துவர நல்ல பலனை காணலாம். கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அதை சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவிவர முடி கருமையடையும், மேலும் முடி உதிர்வதை தடுக்கும் வல்லமை கொண்டது. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டு எடுத்து எட்டு சொட்டு தேனுடன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply